சந்திரசாமி வெளிநாடு போக டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி
டெல்லி: சர்ச்சைக்குரிய சாமியார் சந்திராசாமி என்கிற நேமி சந்த் ஜெயின் வெளிநாடு போக டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சந்திராசாமி மீது 12 அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அந்நியச் செலாவணி சட்டத்தின் பிரிவு 8(1)ஐ மீறும் வகையில், 3 பேரிடமிருந்து வெளிநாட்டுப் பணத்தை வாங்கியதாக சந்திராசாமீ மீது ஒரு வழக்கு உள்ளது. மேலும், அதற்குரிய அந்நியச் செலாவணியை அரசுக்கு செலுத்த் தவறியதாக இன்னொரு வழக்கு உள்ளது.
இதுதவிர 1980ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெறாமலேயே ஜக்தேவ் மிஸ்ரா மற்றும் ஜகதீஷ் பிரசாத் ஆகிய இருவரிடமிருந்தும் 2 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை பெற்றது தொடர்பாக இன்னொரு வழக்கு உள்ளது. இப்படி மொத்தம் 12 வழக்குகள் சந்திராசாமி மீது உள்ளன.
இந்த நிலையில் இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் ஒரு மாத கால சுற்றுப்பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி டெல்லியில் உள்ள இரு நீதிமன்றங்களில் சந்திராசாமி மனு செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த இரு நீதிமன்றங்களும் சந்திராசாமி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு வழக்குக்கும் ரூ.2 லட்சம் காப்புத் தொகையாக டெபாசிட் செய்து விட்டு வெளிநாடு போகலாம் என அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து பொருளாதார குற்றத் தடுப்பு இயக்குநரகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
சந்திராசாமி வெளிநாடு சென்றால் மீண்டும் இந்தியா திரும்ப மாட்டார். எனவே அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கக் கூடாது என்று அது கோரியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல், பொருளாதாரக் குற்றத் தடுப்பு இயக்குநரகத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும் சந்திராசாமி வெளிநாடு செல்ல அனுமதி அளித்தது. அதேசமயம், காப்புத் தொகையாக ஒவ்வொரு வழக்கிலும் ரூ. 10 லட்சம் கட்ட வேண்டும் என சந்திராசாமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications