தஸ்லிமா வீட்டுக் காவலில் இல்லை: காங். மறுப்பு
டெல்லி: சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது செய்தியாளர்களிடம் கூறுகையில், தஸ்லிமா நஸ்ரின் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி கூறியிருப்பதில் உண்மை இல்லை. அப்படிக் கூறுவதற்கு முன்பு அவர் உண்மை நிலவரத்தை தெரிந்து கொண்டு பேசியிருக்க வேண்டும்.
டெல்லியில் உள்ள ரகசிய இடத்தில் தஸ்லிமா தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே அவர் தங்குமிடம் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர் வீட்டுக் காவலில் இருப்பதாக கூறி விட முடியாது.
முதலில் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்திற்குத்தான் தஸ்லிமா சென்றார். அவரை அங்கு 24 மணி நேரம் கூட பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியாமல்தான் பாஜக அரசு டெல்லிக்கு அனுப்பி வைத்தது என்பதை முதலில் அத்வானி புரிந்து கொள்ள வேண்டும்.
அதேசமயம், இந்தியாவில் புகலிடம் அடைந்தவர்கள், இங்குள்ள மக்களின் உணர்வுகளை பாதிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்பதும் முக்கியம் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications