9 ஆண்டுகளாக பஸ் வசதியே இல்லாத கிராமம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடந்த 9 வருடங்களாக அரசு பஸ்களே வராமல் ஒரு கிராமம் பரிதவித்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளது சித்தவநாயக்கன்பட்டி கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 1999ம் ஆண்டு இறுதிவரை விளாத்திகுளத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உளள சித்தவவநாயக்கன்பட்டிக்கு தடம் எண் 106 என்ற டவுண் பஸ் இயக்கப்பட்டது.
இந்நிலையில் விளாத்திகுளம், சித்தவநாயக்கன்பட்டி, இடையே ரோடு வசதி சரியில்லை என்ற காரணத்திற்காக அந்த ஒரே பஸ்சும் நிறுத்தப்பட்டு விட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து சித்தவநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் மீனாட்சி கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் பஸ் வசதியே இல்லாத கிராமங்கள் முற்றிலும் இல்லை என்று கலெக்டர் பழனியாண்டி கடந்த ஜனவரி 26ம் தேதி தெரிவித்துள்ளார்.
ஆனால் 9 வருடமாக நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம். இதனால் எங்கள் கிராம மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.
மேலும் இப்பிரச்சனை தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர் தலைமையில் சுமார் 300 பெண்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications