ராஜ் தாக்கரே கைதாக வாய்ப்பு
மும்பை:மகாராஷ்டிரா நவ நிர்மாண் வேதிகே தலைவர் ராஜ் தாக்கரே கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
தாக்கரேவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் இருப்பதாக இந்திய அட்வொகேட் ஜெனரல் அலுவலகம் மகாராஷ்டிர அரசிடம் தெரிவித்துள்ளது.
டெல்லி வந்துள்ள மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், இது தொடர்பாக இந்திய அட்வொகேட் ஜெனரலின் கருத்தை கேட்டிருந்தார்.
இதையடுத்து, இரு சமூகங்களுக்கு இடையே மோதலை தூண்டுவிட்டு லாபம் தேட முயலும் ராஜை கைது செய்யலாம் என்றும் அட்வொகேட் ஜெனரல் அலுவலகம் பதில் தந்துள்ளது.
டாக்சி டிரைவர்கள் ஸ்டிரைக்:
இந் நிலையில் மும்பையில் வட நாட்டு ஓட்டுனர்களும் டாக்ஸிகளும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மாண் வேதிகே அமைப்பினரால் தாக்கப்பட்டு வருவதைக் கண்டித்து இன்று திடீர் வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 4 நாட்களில் மட்டும் 50 டிரைவர்கள் தாக்கப்பட்டு அவர்களது டாக்ஸிகள் உடைக்கப்பட்டுள்ளன. இந் நிலையில்
இன்று மும்பை டாக்ஸி ஓட்டுனர்கள் சங்க அலுவலகத்தையும் ராஜ் தாக்கரேவின் ஆதரவாளர்கள் தாக்கி சூறையாடினர். மேலும் 2
சங்க நிர்வாகிகளையும் அடித்து உதைத்தனர்.
இதையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட டாக்ஸி டிரைவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீலை டாக்ஸி ஓட்டுனர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அவர் உத்தரவாதம் தந்ததையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
மும்பையில் டாக்ஸி ஓட்டுனர்களில் பெரும்பாலானவர்கள் உ.பி, பீகாரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜுக்கு பவார் கண்டனம்:
இதற்கிடையே வெளி மாநிலத்தவர்களை பிரித்து பேசிய ராஜ் தாக்கரேக்கு சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தேசியவாத கட்சியின் தலைவருமான சரத்பவாரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
ராஜ் தாக்கரேயின் பேச்சு பொறுப்பற்றது. இந்தியா ஒரே நாடு. மும்பையின் பொருளாதார வளர்ச்சியில் அனைத்து மாநில மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அவர்களால் தான் மும்பை வளர்ச்சி அடைந்தது.
திறமைசாலிகள் மும்பை வருகிறார்கள். இங்கு உழைப்பால் தாங்கள் முன்னேறுவதுடன் மும்பை நகரையும் வளர்ச்சி அடைய செய்கிறார்கள். இந்த மாநிலமும் வளர்ச்சி அடைகிறது என்றார்.
பிரதமர் தலையிட லாலு கோரிக்கை:
இந் நிலையில் வட நாட்டவர் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதை தடுக்கு நிறுத்த பிரதமர் தலையிட வேண்டும் என ரயில்ேவ அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திலேேய இந்த பிரச்சனையை லாலு கிளப்பினார்.
சில சக்திகள் தங்களது அரசியல் அஸ்தமானத்தை தள்ளிப் போட நடத்தும் அரசியல் இது என்ற லாலு, ராஜ் தாக்கரேவை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications