ராஜபாளையத்தில் நள்ளிரவில் போலீசாருக்கு அடி, உதை
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீசாரை போதையில் இருந்த ஒரு கும்பல் காட்டு மிராண்டித்தனமாகத் தாக்கியதில் அவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் சாந்தரூபன், பாலமுருகன் ஆகியோர் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவள்ளுவர் நகர் டாஸ்மாக் கடை அருகே இரண்டு கோஷ்டியினர் மது அருந்திவிட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கலைந்து போக சொல்லியுள்ளனர்.
ஆத்திரம் அடைந்த அந்த இரு கோஷ்டியினரும் ஒன்று சேர்ந்து, போலீசார் இருவரையும் உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி போன்றவற்றால் சரமாரியாக தாக்கினர்.
இதில் சாந்தரூபன் மண்டை உடைந்தது. பாலமுருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது. போலீசார் தாக்கப்படுவதை பார்த்த சிலர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த டி.எஸ்.பி.முருகேசன், இன்ஸ்பெக்டர் ராமசுப்பு மற்றும் போலீசார் அந்த இரு போலீசாரையும் அந்த கும்பலிடமிருந்து காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீசாரை பாக்கியராஜ், நாகராஜ், இருளாண்டி, ஜெயக்குமார் உள்பட சுமார் 10 பேரை கைது செய்தனர். மேலும் 10 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications