மோசடி வழக்கில் தேமுதிக கவுன்சிலர் கைது
புதுக்கோட்டை: பண மோசடி வழக்கில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி தேமுதிக கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.
ஆலங்குடி பேரூராட்சியில் உறுப்பினராக இருப்பவர் கிருஷ்ணமூர்த்தி. நேற்று பேரூராட்சிக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது போலீஸார் கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ஆலங்குடியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலை செய்து வருகிறார். இவரிடம் சென்னை பொன்னேரியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பன்னீர் செல்வத்திடம் கடன் வாங்குவதற்காக கடந்த டிசம்பரம் மாதம் ஆலங்குடிக்கு வந்தார்.
முதலில் கிருஷ்ணமூர்த்தியை ரமேஷ் அணுகினார். பன்னீர் செல்வத்திடம் தான் பணம் வாங்கித் தருவதாக கூறிய கிருஷ்ணமூர்த்தி அதற்காக ரமேஷிடம் கமிஷன் பெற்றுள்ளார். பின்னர் பன்னீர் செல்வத்திடம் கடன் தொகையைப் பெற்றார்.
இந்த நிலையில் தனக்குத் தெரிந்த போலீஸாரான நீலமேகம், குடிமைநாதன், கோபால் ஆகியோருக்கு போன் செய்த பன்னீர் செல்வம், ரமேஷிடம் ஏராளமான பணம் இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து ரமேஷை வளைத்துப் பிடித்த அந்த மூன்று போலீஸாரும், அவரிடம் இருப்பது கருப்புப் பணம் என்று கூறி அவற்றைப் பறித்துக் கொண்டனர்.
அதிர்ச்சி அடைந்த ரமேஷ் மாவட்ட எஸ்.பி. கபில் குமார் சரத்கரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸ் படை அமைக்கப்பட்டது.
இந்தப் படையின் தீவிர விசாரணையில், முதலில் மூன்று போலீஸாரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications