யாத்திரைகள் நடத்தும் இல.கணேசன், ராஜா, ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர்
சென்னை: தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த இல.கணேசன், எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர் ஆகியோர் வாகன யாத்திரைகள் நடத்தவுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் இல.கணேசனின் 64வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் அவருக்கு மாலை, சால்வைகள் அணிவித்து இனிப்பு வழங்கினர்.
அப்போது கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மலேசியாவில் இந்துக்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். அங்கு இந்து பண்பாட்டை வளர்த்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ரமாஜி மற்றும் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு மனித உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மாநில செற்குழுக் கூட்டம் திருத்தணியில் மார்ச் 7, 8ம் தேதிகளில் நடக்கிறது.
கட்சியை பலப்படுத்த தமிழ்நாடு முழுவதும் பிரசார யாத்திரை நடத்தப்பட உள்ளது. சேலத்தில் இருந்து 2ம் தேதி என் தலைமையிலும், நீலகிரியில் இருந்து எச்.ராஜா தலைமையிலும் யாத்திரை புறப்படும். 5ம் தேதி பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் வால்பாறையில் இருந்தும், 14ம் தேதி திருநாவுக்கரசர் தலைமையில் சென்னை புறநகரில் இருந்தும் யாத்திரை தொடங்கும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அடுத்த மாதம் அத்வானி சென்னை வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications