தனி நாடானது கொசாவோ!: செர்பியாவிடமிருந்து பிரிவதாக அறிவிப்பு

யூகோஸ்லேவியாவுடன் இணைந்திருந்த பிராந்தியம்தான் கொசாவோ. யூகோஸ்லேவியா உடைந்தபோது செர்பியா, கொசாவோவை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
கொசாவோவில் பெரும்பான்மையினராக இருப்பவர்கள் அல்பேனிய வம்சவாளியினர். செர்பியர்கள், ரஷ்ய வம்சவாளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்பேனிய வம்சாவளியினர் தனி நாடாகப் பிரிய வேண்டிய நடத்திய போராட்டத்ைத அப்போதைய செர்பிய அதிபர் ஸ்லோபாதன் மிலசோவிக் இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். இதில் ஆயிரக்ணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் நேட்டோ படைகள் 1999ம் ஆண்டு செர்பிய தலைநகர் பெல்கிரேட் மீது தாக்குதல் நடத்தியது. மிலசோவிக் சிறை பிடிக்கப்பட்டார். இதையடுத்து கொசாவோ ஐ.நா. கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் செர்பியாவிடமிருந்து பிரிந்து தனி நாடாக தன்னை பிரகடனம் செய்துள்ளது கொசாவோ.
இதுதொடர்பான அறிவிப்பை கொசாவோ நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹசீம் தாஸி வெளியிட்டார். அவர் கூறுகையில், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தினம். இன்று முதல் கொசாவோ தனி நாடு, சுதந்திர நாடு, பெருமைக்குரிய நாடு. இனிமேல் பெல்கிரேட் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றார்.
சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொசாவோ முழுவதும் உற்சாகம் பொங்கி வழிகிறது. அல்பேனியர்கள் பட்டாசுகள் வெடித்தும், ஊர்வலம் சென்றும் கொண்டாடினர்.
ஐ.நா. மற்றும் அமெரிக்காவின் வழிகாட்டுதலின்படி கொசாவோ தனி நாடாக மாறியுள்ளது.
ரஷ்யா எதிர்ப்பு:
கொசாவோ தனி நாடாக மாறியதை ரஷ்யா எதிர்த்துள்ளது. இது தேவையில்லாத பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். எனவே இதை ஐநா. அங்கீகரிக்கக் கூடாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதேபோல செர்பியாவும், கொசாவோ விடுதலையை அங்கீகரிக்க மறுத்து விட்டது. கொசாவோவை நாங்கள் ஒருபோதும் தனி நாடாக ஏற்க மாட்டோம் என்று செர்பிய அதிபர் போரிஸ் டாடிக் கூறியுள்ளார்.
இதற்கிடையே, கொசாவோவில் செர்பிய சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் வெடிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
சுதந்திர கொசாவோ நாட்டுக்கு இங்கிலாந்து 1,000 வீரர்களைக் கொண்ட அமைதிப் படையை அனுப்பவுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications