24ம் தேதி முதல் பழனியில் மீண்டும் ரோப் கார் சேவை
பழனி: பழனி மலைக் கோவிலில் நடந்த விபத்தைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப் கார் சேவை வருகிற 24ம் தேதி முதல் மீண்டும் இயக்கத்திற்கு வருகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் கடந்த அதிமுக ஆட்சியில் ரோப் கார் வசதி செய்யப்பட்டது. பக்தர்களிடையே இந்த ரோப் காருக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் வின்ச் சேவையோடு ரோப் கார் சேவையும் வெற்றிகரமாக இயங்கி வந்தது.
முதலில் 20 பெட்டிகள் வரை இயக்கப் பட்டன. ஆனால் அவ்வப்போது ஏற்பட்ட சிறுசிறு விபத்துக்களால் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி அந்தரத்தில் சென்ற ரோப்கார் திடீரென்று அறுந்து விழுந்தது. இதில் 4 பக்தர்கள் உயிரிழந்தனர். இதனால் ரோப்கார் இயக்கம் நிறுத்தப்பட்டது.
இதுபோன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டன. இதன் அடிப்படையில் அரசிடம் அறிக்ைக சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி மேல்தளத்தில் இருந்து 350 மீட்டர் இடை வெளியில் அமைக்கப்பட்டிருந்த கீழ்தள டவர் அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக 20 மீட்டர் இடைவெளியில் புதிய டவர் அமைக்கப்பட்டது.
50 மீட்டர் இடைவெளியிலான தூரத்தில் இயக்கப்பட்ட ரோப்கார் வரும் காலங்களில் 2 மீட்டர் இடைவெளி தூரத்தில் இயக்கப்படும். கீழ்தளத்தில் இருந்து கோவிலுக்கு 2 நிமிடங்களில் செல்லும் அளவுக்கு இந்த ரோப்கார் இயக்கப்படும்.
சுமார் 350 கிலோ எடையுடன் 2 பெட்டிகள் மட்டும் வருகிற 24-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications