கோவையில் ரோந்து போலீஸாரை தாக்கி துப்பாக்கி கொள்ளை
கோவை: கோவையில் ரோந்து சென்ற போலீஸாரைத் தாக்கி அவர்கள் வைத்திருந்த ரிவால்வரை 10 பேர் கொண்ட கும்பல் பறித்துச் சென்றதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் துப்பாக்கிகளும், வாக்கிடாக்கியும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு போலீசே காரணமா அல்லது நக்ஸல்கள் உள்பட வேறு யாராவது காரணமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந் நிலையில் கோவையைச் சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் துப்பாக்கியை பறிகொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
கோவை சாய்பாபா நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு காவலர்கள் நேற்று இரவு ரோந்துப் பணிக்குச் சென்றனர். பாரதி பூங்கா பகுதியில் அவர்கள் சென்றபோது பூங்காவுக்கு உள்ளே விளக்குகள் எரிவதைப் பார்த்தனர்.
வாட்ச்மேனைக் கூப்பிட்டபடியே அவர்கள் உள்ளே சென்றபோது, திடீரெ 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை மடக்கியது.
பின்னர் பூங்காவில் இருந்த ஒரு அறையில் வைத்து அவர்கள் கை, கால்களைக் கட்டினர். பிறகு போலீஸாரிடமிருந்த ஒரு ரிவால்வரை பறித்துக் கொண்டு அக்கும்பல் தப்பி விட்டது.
இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியை திருடிச் சென்றது திருடர்களா, தீவிரவாதிகளா அல்லது சந்தனக் கடத்தல்கார்களா என்று போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications