ரோந்து போலீஸுக்கு துப்பாக்கி 'கட்'!
கோவை: கோவை நகரில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு துப்பாக்கி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட 31 துப்பாக்கிகளையும் உடனடியாக திருப்பித் தருமாறு போலீஸாருக்கு மாநிகர காவல்துறை ஆணையர் காந்திராஜன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு காவலர்கள், சில நாட்களுக்கு முன்பு இரவுக் காவலுக்குச் சென்றபோது பாரதி பூங்கா பகுதியில் 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, கை, கால்களைக் கட்டி அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியைப் பறித்துச் சென்றதாக தகவல் வெளியானது.
அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் கொள்ளை போன பரபரப்பே நீங்காத நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலத்திற்கும், பாரதி பூங்கா வாட்ச்மேன் கொடுத்துள்ள வாக்குமூலத்திற்கும் இடையே நிறைய குழப்பங்கள் இருப்பதாக தெரிகிறது. எனவே போலீஸார் தங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
நேற்று கூடுதல் டிஜிபி விஜயக்குமார் கோவைக்கு வந்து விசாரணை நடத்தினார்.
சந்தனக் கடத்தல்காரர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கக் கூடுமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் ரோந்துப் போலீஸாருக்கு இனிமேல் துப்பாக்கிகள் வழங்கப்பட மாட்டாது என்று மாநகர காவல்துறை ஆணையர் காந்திராஜன் அறிவித்துள்ளார். தற்போது ரோந்துப் போலீஸார் வசம் உள்ள 31 துப்பாக்கிகளையும் உடனடியாக ஒப்படைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications