காதலிக்க மறுத்த மாணவி மீது ஆசிட் வீசிய வாலிபர்
மதுரை: காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்தியும், ஆசிட் வீசியும் கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம், சமயநல்லூரைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகள் பாண்டீஸ்வரி (15). இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (19), பாண்டீஸ்வரியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
விவசாயக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவரான இவரின் காதலை பாண்டீஸ்வரி ஏற்கவில்லை.
இந் நிலையில் பாண்டீஸ்வரியின் வீட்டுக்கு வந்த வேல்முருகன் அவரை திருமணம் செய்து கொள்ள கோவிலுக்கு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் இதற்கு பாண்டீஸ்வரி மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் கத்தியால் பாண்டீஸ்வரியை குத்தினார். கத்திகுத்து காயத்துடன் அலறியபடி ரோட்டில் ஓடிய அந்தப் பெண்ணின் மீது ஆசிட் பாட்டிலை வீசினார் வேல்முருகன்.
இதில் பாண்டீஸ்வரி மீதும், இதைத் தடுக்க வந்த பாண்டீஸ்வரியின் தாத்தா அழகுமலை மீதும் ஆசிட் தெறித்தது. படுகாயமடைந்த இருவரும் உடல் வெந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தப்பி ஓடிவிட்ட வேல்முருகனை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications