அரசுக்கு ஆதரவு வாபஸ்: இடதுசாரிகளின் புது மிரட்டல்!

அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசுடன் மோதல் போக்கை மேற்கொண்டுள்ள இடதுசாரிகள் தற்போது புதிய மிரட்டலை விடுத்துள்ளன.
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு தீவிரம் காட்டினால் உடனடியாக ஆதரவைத் திரும்பப் பெறப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் பரதன் கூறியிருப்பதாவது:
அமெரிக்கவுடனான அணுசக்தி ஒப்பந்த நடவடிக்கையில் தீவிரம் காட்டினால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற நேரிடும். அரசின் அப்படிப்பட்ட முடிவுக்கு நாங்களும் ஒரு அங்கமாக இருக்க மாட்டோம்.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் கட்சி கண்ணோட்ட அரசியலை விட்டு நாட்டு நலனை கருத்தில் கொண்டு இதை ஆதரிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமரும், பாஜவின் முக்கிய தலைவருமான வாஜ்பாய்க்கு அழைப்பு விடுத்துள்ளீர்கள். இதை, அணு சக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க பாஜவுக்கு விடுத்துள்ள பகிரங்க அழைப்பாகவே நாங்கள் கருதுகிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து ஒற்றுமை காண்போம் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் நாடாளுமனற விவாதத்திலேயே அதை காண முடியவில்லை. உங்கள் கருத்து வலுவற்றதாக உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா?
சமீபகாலமாக அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக வரும் செய்திகள் எங்களுக்கு கவலை தருவதாக உள்ளது. ஒப்பந்தத்தை விரைவாக அமல்படுத்த அமெரிக்கா நெருக்கடி தருகிறது. ஆனால் அதை மத்திய அரசு கண்டிக்காதது கவலை அளிக்கிறது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் தேசிய நலன்களுக்கும், சுதந்திரமான வெளியுறவு கொள்கைக்கும், இறையாண்மைக்கும் எதிரானது என்று நாங்கள் கருதுவது உங்களுக்குத் தெரியும்.
அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்லாது பிற விவகாரங்களிலும் குறைந்தபட்ச பொது ஒப்பந்தத்தை மீறும் வகையிலேயே அரசு நடந்து வருகிறது. சுற்றுப் பயணத்தில் இருப்பதால் இக்கடிதத்தை பேக்ஸ் மூலம் அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார் பரதன்.
சோனியா - மன்மோகன் ஆலோசனை:
பரதனின் பகிரங்க மிரட்டலைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இடதுசாரிகளின் புதிய, பகிரங்க மிரட்டல் குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications