என் ஜிபே-வில் இருந்து பணம் போயிருக்கு.. எம்எல்ஏவை இழுக்கும் பிரச்சினை போல இருக்கு! எஸ்வி சேகர் கோபம்
சென்னை: நான் பணத்தை கட்டி ரசீதும் வாங்கிவிட்டேன். ஆனால் அந்த பணத்தை நீங்கள் கொண்டு கட்டவில்லை. வேட்பாளர்தான் கட்டியுள்ளார் என்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் தமிழக அரசியலில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவரை புதுசா ஒருத்தர் இழுக்கிறார் என்று பெரிய பிரச்சினை போய்க்கொண்டு இருக்கிறது அல்லவா? 50 கோடி ரூபாய் என்று அந்த மாதிரிதான் நடக்கிறது என எஸ்வி சேகர் கூறியுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்வி சேகர், சங்கம் தொடர்பாக அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார். எஸ்வி சேகர் கூறியதாவது:-

பணத்தை கட்டி ரசீதும் வாங்கிவிட்டேன்
தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தேர்தல். கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் எனக்கு கிடைத்தது. லைஃப் மெம்பராக இருந்தாலும் கூட ரூ.100 பெப்சிக்கு கட்ட வேண்டும் என்று ரூல்ஸ் போட்டு இருக்காங்க போல.. நியாயமாக ஒரு வாழ்நாள் உறுப்பினரை அப்படி கட்டுப்படுத்த முடியாது. தனியாக வருடம் தோறும் 100 ரூபாய் கட்ட வேண்டும் என்று கட்டுப்படுத்த முடியாது. அது என்னவென்று தெரியவில்லை.
என்கிட்ட முன்னாடியே சொன்னார்கள்.. நான் பணத்தை கட்டி ரசீதும் வாங்கிவிட்டேன். ஆனால் அந்த பணத்தை நீங்கள் கொண்டு கட்டவில்லை. வேட்பாளர்தான் கட்டியுள்ளார் என்கிறார்கள். அது எப்படி என்னுடைய ஜிபேவில் இருந்து பணம் போயுள்ளது. டைம் இருந்தால் நான் கட்டுவேன். இல்லையென்றால் யார்கிட்டயாவது கொடுத்து கட்டுவேன். நவீன் என்பவர்தான் எனக்கு கட்டியிருக்கிறார். அது செல்லாது.. நீங்கள் லெட்டர் எழுதி கொடுங்கள்.. எனக்கு தெரியாமல் யாரோ பணம் கட்டிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.
ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவரை
இது எப்படி இருக்கிறது என்றால் தமிழக அரசியலில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவரை புதுசா ஒருத்தர் இழுக்கிறார் என்று பெரிய பிரச்சினை போய்க்கொண்டு இருக்கிறது அல்லவா? 50 கோடி ரூபாய் என்று அந்த மாதிரிதான் நடக்கிறது. சினிமாத்துறையாக இருக்கட்டும்.. கலைத்துறையாக இருக்கட்டும்.. சண்டை போட்டுகொள்வது வாழ்நாள் முழுக்க வெறுப்பை கொண்டு வந்துவிட்டுரும். கலைஞர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
சினிமாவில் ஒரே ஒரு தொழிற்சங்கம்தான் இருக்க வேண்டுமா? சினிமாவில் இப்போது புதுசு புதுசா வருகிறார்கள். அடுத்தவர்கள் வரவே கூடாது என்று சொல்வது நல்ல எண்ணம் இல்லை. புதுசு புதுசா வருகிறார்கள். தேசிய விருது வாங்குகிறார்கள். நீ எப்படி வரலாம். நீ எப்படி தேசிய விருது வாங்கலாம் என்று சொல்லக்கூடாது. கலைத்துறை என்பது ஒரு பிளே கிரவுண்ட்.. ஒருவர் இன்னொருவரை தடை செய்வதற்கு அரசியல் அமைப்பு எந்த உரிமையையும் கொடுக்கவில்லை.
தகுதி நீக்கம் செய்துவிட்டதாக ஒரு லெட்டர் எழுதினார்கள்.. நீங்களே எழுதி கொடுங்க கையெழுத்து போடுகிறேன் என்று சொன்னேன். இப்படி ஒரு லெட்டரில் கையெழுத்து போட்டால்தான் ஓட்டு போட முடியும் என்று ப்ரூப் பண்ண வேண்டும் அலல்வா.. போட்டுவிட்டேன்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
