கார் கடன்: மாருதி-ஸ்ரீராம் பைனான்ஸ் ரூ1000 கோடி திட்டம்
டெல்லி: புறநகர் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு கார் கடன் திட்டத்தை வழங்குவதற்காக மாருதி சுசூகி நிறுவனமும், ஸ்ரீராம் சிட்டி யூனியன் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசிகியின் மாருதி 800, ஆம்னி, ஆல்ட்டோ போன்ற அடிப்படை மாடல்களுக்கு இந்த நிதிவசதி அளிக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 10ம் தேதி கையெழுத்தானது.
கடன் திட்டம் குறித்து மாருதி சுசூகி தலைமை பொது மேலாளர் (விற்பனை) ஆர்.எஸ்.கால்சி கூறுகையில்,
ஊரக மற்றும் புறநகர் கார் மார்க்கெட்டை வளைப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். மக்கள் விரும்பும் மாடல்கள் எங்களிடம் உள்ளன. வாடிக்கையாளர் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அவற்றை கொண்டு சேர்ப்பதற்கான திறமையான கட்டமைப்பு வசதியும் உள்ளது.
ஆனாலும் முக்கிய மெட்ரோ நகரங்கள் தவிர்த்த பிற பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதியை ஏற்படுத்துவதற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.
இப்போசு ஸ்ரீராம் நிதி நிறுவனத்துடன் தற்போது செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி சிரமம் இல்லாத எளிய நடைமுறைகளின்கீழ் எங்கள் வாடிக்கையாளர்கள் விரைவில் கடன் பெறமுடியும் என்றார்.
ஸ்ரீராம் சிட்டி செயல் இயக்குனர் சுபஸ்ரீ ஸ்ரீராம் கூறுகையில்,
மாருதி சுசூகி நிறுவனத்துடன் கூட்டாகச் செயல்படுத்தப்போகும் இந்தத் திட்டத்தினால் இருதரப்பு வாடிக்கையாளர்களுக்கும் பலன் உண்டு. முதற்கட்டமாக இதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தக் கார் கடன் வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். படிப்படியாக நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
பெருநகரங்கள் தவிர இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு நகரங்களில் உள்ள வாடிக்கையாளர் சந்தையைக் குறிவைத்தே நாங்கள் இந்த கடன் திட்டத்தை செயல்படுத்துகிறோம்" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications