மருத்துவனையில் ரவுடி வெட்டிக் கொலை
களக்காடு: களக்காட்டில் பணம் கேட்டு மிரட்டி இருவரை கத்தியால் குத்திய ரவுடி அரசு மருத்துவமனையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
களக்காடு கோட்டை தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் முருகன். நெல் அறுவடை இயந்திர புரோக்கர். இவர் நேற்று பிற்பகலில் களக்காடு பழைய பஸ் நிலையம் காஜராஜர் சிலை அருகே தனது நண்பர்கள் கீழதுவரைக்குளத்தை சேர்ந்த ராஜா, செல்லத்துரை ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த திரட்டூரை சேர்ந்த நாராயணன் மகன் உப்பு என்ற தங்கராஜ், முருகனிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டினார். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், ராஜா, செல்லத்துரை ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் படுகாயமடைந்த இருவரையும் களக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு டாக்டர்கள் இல்லாததால் அவர்களை பாளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் தப்பியோடிய தங்கராஜ் களக்காடு அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற வந்தார்.
அப்போது அங்கிருந்த முருகன் எனது நண்பர்களை குத்தி விட்டு இங்கு எதற்காக வந்தாய் என்று கூறி தங்கராஜை அரிவாளால் தலை மற்றும் உடலின் பல பாகங்களில் சரமாரியாக வெட்டினார்.
ரத்தம் சொட்ட சொட்ட அவர் மருத்துவமனைக்குள் ஓடினார். பின்னர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும நாங்குநேரி டிஎஸ்பி சண்முகநாதன், இன்ஸ்பெக்டர் நேதாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை நடத்தினர். களக்காடு அரசு மருத்துவமனைக்குள்ளே நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட தங்கராஜ் பிரபல ரவுடியாவார். இவர் மீது களக்காடு போலீஸ் நிலையத்தில் இரு கொலை முயற்சிகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications