அதிமுக இளைஞர் பாசறைகளில் சேர ஆளில்லை!

தமிழகத்தில் விஜய்காந்த் கட்சியில் ஏராளமான இளைஞர்கள் சேர்ந்து வருவதையடுத்து உதறல் எடுத்த திமுக எப்போதுமில்லா அதிசயமாக இளைஞரணி மாநாட்டை நடத்தியது.
அதிமுகவும் போட்டி போட்டிக் கொண்டு தமிழகம் முழுவதும் இளைஞர் பாசறைகளையும் இளம் பெண்கள் பாசறைகளையும் தொடங்குவதாக அறிவித்தது.
இதுவரை எந்தக் கட்சிகளிலும் சேராத பதினெட்டு வயதிலிருந்து இருபந்தைந்து வயதுக்குட்பட்டவர்களை இதில் சேர்த்து அதிமுகவை பலப்படுத்த திட்டமிடப்பட்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த 7ம் தேதி முதல் பாசறைகள் தொடங்கப்பட்டன.
ஆனால், கரூர் மாவட்டத்தில் இந்த அதிமுக பாசறைகளில் சேர போதிய இளைஞர்கள் இளம் பெண்கள் முன் வரவில்லை.
இதையடுத்து ஏற்கனவே அதிமுக இளைஞரணி, மற்றும் மகளிர் அணியில் உள்ளவர்களை மீண்டும் பாசறைகளில் சேர்த்து புதிதாக கட்சியில் சேர்ந்தவர்கள் போல கணக்கு காட்டியுள்ளனர் அம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்.
இது தொடர்பான விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செம்மலையிடம் சில சீரியசான அதிமுக தொண்டர்கள் இது பற்றி புகார் கூறினர்.
ஆனால், நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டு இப்போது தான் கட்சியில் சாப விமோச்சனம் பெற்றுள்ள செம்மலை, நமக்கு ஏன் வம்பு என்று சைலண்ட்டாகிவிட்டார்.
இதையடுத்து சில நிர்வாகிகள் தலைமைக்கு புகார் கணைகளை பறக்க விட்டுள்ளனராம்.
கரூரில் மட்டுமல்ல தமிழகத்தின் பல பகுதிகளிலுமே இந்த 'ஜோக்' நடந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications