தமிழகத்தில் புலிகளா?: நாராயணன் பேச்சை மறுக்கும் பிரதமர் அலுவலகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் தளம் இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கூறவில்லை என பிரதமர் அலுவலகம் விளக்கியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழைக்கு வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் மற்றும் கேரளாவில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இருப்பதாகவும், இங்கிருந்து இலங்கைக்கு உதவிகள் செல்வதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து ஐபி விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனால் சலசலப்பு ஏற்பட்டது. தமிழக முதல்வர் கருணாநிதியும், டிஜிபியும், தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முற்றிலும் இல்லை என்று கூறி வரும் நிலையில், நாராயணன் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நாராயணன் பேட்டி குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில், தமிழகத்தில் விடுதலைப் புலிகள் தளம் இருக்கிறது என்று நாராயணன் கூறவில்லை.

கேரளாவில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதுகுறித்து விசாரிக்கப்படும் என்று மட்டும்தான் நாராயணன் தெரிவித்திருந்தார்.

தமிழகத்திலோ அல்லது வேறு பகுதியிலோ விடுதலைப் புலிகளின் தளம் இருப்பதாகவோ, நடமாட்டம் இருப்பதாகவோ அவர் கூறவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு உதவி: சிபிஐ கண்டனம்

இந் நிலையி்ல் இலங்கைக்கு மறைமுகமாக இந்திய அரசு ராணுவ உதவிகளைச் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, உடனடியாக இலங்கைக்கு ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என ராஜ்யசபாவில் கோரிக்கை விடுத்தது.

ராஜ்யசபாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான டி.ராஜா பேசுகையில்,

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற நிலையிலிருந்து மாறி, தமிழர்களுக்கு எதிரான போராக அந்த நாட்டு ராணுவத்தின் செயல்கள் மாறியுள்ளன.

அப்படிப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசு மறைமுகமாக ராணுவ உதவிகளை அழித்து வருகிறது. இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் ராணுவத்தின் தொடர் தாக்குதலால் உயிரிழந்து வருகின்றனர். தமிழ் இனம் அங்கு அழிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக இன அழிப்பில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசை இந்தியா கடுமையாக கண்டிக்க வேண்டும்.

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா ரகசியப் பயிற்சி கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின்றன. இது மிகவும் கவலை தருவதாக உள்ளது. தமிழர்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி அளிப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

இலங்கையிலிருந்து பெருமளவில் தமிழர்கள் அகதிகளாக வந்து கொண்டுள்ள நிலையில், இந்திய அரசு மெளனம் காத்து வருவது வேதனையாக உள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது.

இலங்கை விவகாரம் தொடர்பாக இந்திய அரசு தெளிவான கொள்கையை அறிவிக்க வேண்டும். இலங்கைக்கு ஆயுத உதவி தரப்படுகிறதா இல்லையா என்பதை இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறதா, இல்லையா என்பது தெளிவாகக் கூற வேண்டும் என்றார் அவர்.

ராஜாவின் பேச்சுக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் எம்.பிக்களும், பிற எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+