பிரியாணியி்ல் போதை பொருள் கடத்தல்
சென்னை: பிரியாணிக்குள் மறைத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள கேட்டமைன் போதை மாத்திரைகளை மலேசியாவுக்கு கடத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் நேற்றிரவு மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் ஒவ்வொருவராக அதில் ஏறிக் கொண்டிருந்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் கையில் பிளாஸ்டிக் பையுடன் ஏறினார். சந்தேகத்தின் பேரில் அவரை சுங்க இலாகா அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
இதில் அவர் கடலூரைச் சேர்ந்த நந்தகுமார் (28) என்பது தெரிந்தது. கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பையை திறந்து பார்த்ததில் 12 பிரியாணி பார்சல்கள் இருந்தன.
அவற்றை மலேசியாவில் உள்ள நண்பர்களுக்காக கொண்டு செல்வதாக நந்தகுமார் கூறினார். ஆனால் அந்தப் பொட்டலங்களை திறந்து பார்த்தபோது, அதற்குள் தடைசெய்யப்பட்டுள்ள கேட்டமின் மாத்திரைகள் இருந்தன.
50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த மாத்திரைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் நந்தகுமாரை பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications