இழப்பீடு தராத வேலூர் கலெக்டர் கார், அலுவலகம் ஜப்தி
வேலூர்: கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு தராமல் இழுத்தடித்த கலெக்டர் கார் மற்றும் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.
கடந்த 1993ம் ஆண்டில் இவரது நிலத்தை சென்ட் ரூ100 வீதம் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தியது.
ஆனால் சென்ட் ஒன்றுக்கு ரூ. 1000 வீதம் தனது நிலத்துக்கு மாவட்ட நிர்வகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட நீதி மன்றத்தில் செல்வராஜ் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் செல்வராஜ் நிலத்துக்கு ஒரு சென்ட்க்கு ரூ 1000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தொகையை வழங்காமல் மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்து வந்தது.
இதனால் கோர்ட் உத்தரவை நிறைவேற்றக் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்தார் செல்வராஜ்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வேலூர் ஆதிதிராவிடர் நல அலுவலம் மற்றும் கலெக்டரின் வாகனங்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிமன்ற அமீனாக்கள் நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இந்த நிலையில் உயர் அதிகாரிகள் நீதிமன்ற அமீனாவிடம் ஒரு வார கால அவகாசம் வேண்டினர். அதற்குள் செல்வராஜுக்கு சேரவேண்டிய இழப்பீடை வழங்குவதாக உறுதிமொழி அளித்தனர்.
இதனால் நீதிமன்ற அமீனாக்கள் தற்காலிகமாக திரும்பி சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications