கோட்டையில் முதியவர் ஜட்டியுடன் ஓட்டம்- பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்
சென்னை: கோட்டையில் முதல்வர் வருகையின்போது பாதுகாப்புப் பணியில் கவனக் குறைவாக இருந்ததாக பெண் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
முதல்வர் கருணாநிதி நேற்று கோட்டைக்கு வந்த போது ஒரு முதியவர் வேட்டியை அவிழ்த்து விட்டு ஜட்டியுடன் ரோட்டில் ஓடி வந்தார்.
கோட்டையில் நடந்த இந்த சம்பவத்தையடுத்து போலீசார் அவரைப் பிடித்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் காரைக்குடியை சேர்ந்த நாராயணன் (64) என்று தெரியவந்தது.
தனக்கு சொந்தமான 73 சென்ட் நிலத்தை மீட்பது தொடர்பாக முதல்வரிடம் மனு கொடுக்க வந்ததாகக் கூறினார். ஆனாலும் முதல்வரின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்ததால் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோட்டையில் பலத்த பாதுகாப்பு வளையத்தையு்ம் மீறி முதியவர் ஓடியது குறித்து இணை கமிஷனர் ரவி விசாரணை நடத்தினார்.
இதில் சட்டசபை முன் மாதவரம் துணை கமிஷனர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் திவ்யா தான் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பணியில் கவனக் குறைவாக இருந்ததாக திவ்யாவை இணை கமிஷனர் ரவி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications