இலங்கை-3 தமிழர் கட்சிகள் புது கூட்டணி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு முதல் முறையாக தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலை கூட்டாக சந்திக்க தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (பிளாட்), தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்) மற்றும் ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி ஆகியவை முடிவு செய்துள்ளன. இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து புதிதாக தமிழர் ஜனநாயக தேசிய கூட்டணி என்ற புதிய கூட்டணியையும் உருவாக்கியுள்ளன.
இதுகுறித்து பிளாட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மே 10ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர்களின் ஒற்றுமையைக் காட்டுவதற்காக இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டணியில் ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி மற்றும் வேறு சில தமிழர் கட்சிகளையும் இணைக்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் மிகப் பெரிய கூட்டணியாக இது உருவெடுக்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான ஏப்ரல் 3ம் தேதிக்குள் இந்தக் கூட்டணி இறுதியாகி விடும்.
அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே அதுபோன்ற சமயத்தில் தமிழர் ஒருவர் கிழக்கு மாகாண முதல்வராக இருப்பதே நல்லது என்பதால் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்தக் கூட்டணி நேற்று இறுதியானது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் சித்தார்த்தன், டியுஎல்எப் தலைவர் அனந்தசங்கரி, இபிஆர்எல்எப் உள்ளூர் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு வரை விடுதலைப் புலிகள் வசம் இருந்த கிழக்குப் பகுதியை ராணுவம் கைப்பற்றிய பின்னர் அங்கு முதல் முறையாக தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications