50% ஓட்டுக்கள் பெற்றால்தான் வெற்றி - தேர்தல் ஆணையர் யோசனை

திருச்சியில் நடந்த தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களிடையே பேசுகையில் இந்த யோசனையை கோபாலசாமி தெரிவித்தார்.
அவர் கூறுகையில், முன்பு போல இப்போது அரசியல் நிலைமை இல்லை. கட்சிகளுக்குக் கிடைக்கும் ஓட்டுக்கள் சிதறி விட்டன. பதிவாகும் ஓட்டுக்களில் 30 சதவீத ஓட்டுக்களைப் பெற்றாலே ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று விடக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அப்படி வெற்றி பெற்ற வேட்பாளருக்கு எதிராக 70 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருப்பதை நாம் கவனத்தில் கொள்ளத் தவறி விடுகிறோம்.
இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க ஒரு வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமானால், குறைந்தது 50 சதவீத ஓட்டுக்களைப் பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும்.
பீகார், உ.பி. மாநிலங்களில் வெற்றி பெற்ற பெரும்பாலான வேட்பாளர்கள் 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு சதவீதங்களையே பெற்றுள்ளனர். கேரளா, மேற்கு வங்கம், குஜராத் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டும்தான் 50 சதவீத ஓட்டுக்களைப் பெற்று வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
விகிதாச்சார பிரதநிதித்துவ முறையை இந்தியாவில் அமல்படுத்துவது சாத்தியமில்லை. அப்படிச் செய்தால் ஓட்டுக்கள் இன்னும் சிதறிப் போய் விடும்.
அதேபோல வாக்களிப்பதை கட்டாயமாக்குவதும் சாத்தியமில்லை. உலக அளவில் 33 நாடுகளில் ஓட்டுப் போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவற்றிலும் சில நாடுகளில்தான் அது சட்டப்பூர்வாக அமல்படுத்தப்படுகிறது.
மக்கள் தாங்களாகவே முன்வந்து ஓட்டுப் போடுவதிலும், தேர்தல்களில் ஆர்வம் காட்டினாலும் மட்டும்தான் நாட்டின் ஜனநாயகத்தை பலப்படுத்த முடியும்.
சிறந்த ஆட்சி வர வேண்டும் என மக்கள் முதலில் விரும்ப வேண்டும். அதற்கேற்ப வாக்களிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்கள் சரிவரப் பயன்படுத்தினாலே போதும், நல்ல ஆட்சி தானாக வரும் என்றார் அவர்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications