மாயமானதாக கூறப்பட்டவர் உடல் வந்து சேர்ந்தது
சென்னை: விமானத்தில் கொண்டு வரப்பட்டபோது, காணாமல் போனதாக கூறப்பட்ட நாகூர் இந்தியரின் உடல் ஒரு நாள் தாமதத்திற்குப் பின்னர் இன்று சென்னை வந்து சேர்ந்தது.
நாகூரைச் சேர்ந்தவர் யூசுப் குத்புதீன். இவர் துபாயில் வேவலை பார்த்து வந்தார். கடந்த 25ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் இருவர் துபாய் சென்று உடலைப் பெற்றுக் கொண்டு திருச்சிக்கு விமானம் மூலம் நேற்று வந்தனர்.
திருச்சி வந்து இறங்கிய அவர்கள் குத்புதீன் உடலைக் காணாமல் திடுக்கிட்டனர். இதுகுறித்து விமான நிலையத்தில் கேட்டபோது சரிவர பதில் கிடைக்கவில்லை.
இதையடுத்து போலீஸில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து திருச்சி ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் துபாய் விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, குத்புதீன் உடல் இருந்த சவப்பெட்டியை விமானத்தில் ஏற்ற மறந்தது தெரிய வந்தது.
இதையடுத்து உடலை உடனடியாக இன்று சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை 4.40 மணிக்கு குத்புதீன் உடல் வந்து சேர்ந்தது.
உடலைப் பெற்றுக் கொண்ட அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்குக் கொண்டு சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications