சவுதி போலீஸ் துரத்தல்: 4 பேர் பரிதாப பலி
துபாய்: சவுதி அரேபியாவில் போலீஸ் துரத்தியதில், காரில் பயணம் செய்த 2 ஆண்களும், 2 பெண்களும் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சவுதி அரேபியாவின் புனித நகரங்களில் ஒன்றான மதீனாவில் இந்த சம்பவம் நடந்தது.
சவுதி அரேபியாவில் மதக் கட்டுப்பாடுகளும், சம்பிரதாயதங்களும் மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. பொது இடத்தில் ஒழுக்க நெறிமுறைகளை கண்காணிக்க தனியாக மாரல் போலீஸ் பிரிவு உள்ளது.
ஆனால், இந்தப் போலீஸாரின் செயல்கள் அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகி ருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு காரில் டிரைவருடன் பயணம் செய்த ஒரு பெண்ணை நூற்றுக்கணக்கானவர்கள் முன்பு அவமானப்படுத்தும் வகையில் இந்த போலீஸார் நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
இந் நிலையில் இந்த போலீஸாரின் செயலால் 4 உயிர்கள் பலியாகியுள்ளன.
மதீனாவின் புறநகரில் கடந்த மாதம், 2 பெண்கள், 2 ஆண்கள் ஒரு காரில் பயணித்தனர். அந்தக் காரை போலீஸார் தங்களது காரில் துரத்தினர். இதைப் பார்த்து பயந்த நான்கு பேர் பயணம் செய்த கார் வேகமாக சென்றதில் விபத்து ஏற்பட்டு விட்டது.
இதில் காரில் இருந்த நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்திற்கு போலீஸார் படு வேகமாக காரில் துரத்தியதே காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விமர்சித்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications