உகாதி: ஆளுநர்,, கருணாநிதி, ஜெ. வாழ்த்து
சென்னை:தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு தினமான உகாதியையொட்டி தெலுங்கு பேசும் மக்களுக்கு ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமான உகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், உகாதி திருநாளையொட்டி என் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டு அமைதியையும், வளத்தையும், ஒற்றுமையையும் கொடுத்து நாட்டுக்கு நன்மை சேர்க்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தின் பண்பாட்டுணர்வோடு ஒன்று கலந்து பல ஆண்டுகளாகத் தமிழக மக்களோடு இணைந்து வாழும் தெலுங்கு சமுதாய மக்கள் அனைவரது வாழ்வும், தொழிலும் சிறந்து, வளம் பெருகிட என் இதயம் கனிந்த உகாதித் திருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
மனித நேயத்தின் அடிப்படையில் இந்த நல்லுறவு பேணும் பாங்கும், மற்றவர்களை மதிக்கும் நல்லிணக்க உணர்வுகளும் தமிழகத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் தழைத்திட வேண்டுமென்பதைத் தமிழகம் எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வசந்த காலத்தின் தொடக்கமாகத் திகழும் உகாதித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் நிலவுகின்ற இதுபோன்ற ஒருமைப்பாடு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தழைத்தோங்க வேண்டும் என்ற என்னுடைய அவாவைத் தெரிவித்து, இந்த உகாதித் திருநாள் புதிய வாழ்வையும், வளத்தையும் வெற்றிகளையும் வழங்கும் புத்தாண்டாக மலரட்டும் என்று வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் வாழ்த்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உகாதியில், மக்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கு, ஏற்ப நாட்டிலுள்ள அனைத்து மக்களும் வேற்றுமைகள் இன்றி அவ்வப்போது ஏற்படும் சமுதாய பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உகாதி என ஆந்திரா, கர்நாடகத்தில் கொண்டாடப்படும் இந்த புது வருடப் பிறப்பு, வடக்கில் குடி பட்வா, சைத்ர சுக்லாடி, சேத்தி சந்த் உள்ளிட்ட பெயர்களில் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications