சிறுத்தை தாக்கி சிறுமி பலி- ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு
சென்னை: சிறுத்தை தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் வால்பாறை பகுதியில் சிறுத்தை தாக்கி சிறுமி இறந்தது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை காங்கிரஸ் உறுப்பினர் கோவை தங்கம் கொண்டு வந்தார்.
அவர் கூறுகையில், வால்பாறை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் 3 பேர் சிறுத்தை தாக்குதலில் பலியாகியுள்ளனர். எனவே 20 இடங்களில் நிரந்தரமாக புலிக் கூண்டுகளை வைக்க வேண்டும். இதற்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நான் ரூ. 10 லட்சம் கொடுக்க தயாராக இருக்கிறேன்.
இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றார்.
இதையடுத்து பேசிய முதல்வர் கருணாநிதி, சிறுத்தை தாக்கி சிறுமி இறந்தது வேதனைக்குரியது. தாய் முன்னே செல்லும் போது பின்னால் வந்த குழந்தை, சிறுத்தையால் தாக்கப்பட்டு இறந்தது சிந்தையை கலங்க வைக்கிறது.
சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும். உறுப்பினர் கோவை தங்கம் கொடுக்கும் ரூ.10 லட்சம் நிதியில் இருந்து கூண்டுகள் அமைக்கப்பட்டு அதற்கு தங்க கூண்டு' என்று பெயர் வைக்கப்படும் என்றார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications