குவைத்: இந்தியர் பெருக்கத்தை கட்டுப்படுத்த கோரிக்கை
துபாய்: குவைத் நாட்டில் பெருகி வரும் இந்தியர் உள்ளிட்ட அன்னிய தொழிலாளர் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகத்திற்கு முக்கிய அரசியல் பிரமுகர் அறிவுரை கூறியுள்ளார்.
குவைத் தேசிய தேர்தல் வரும் மே மாதம் 17ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடவுள்ள சாத் அல்-கான்ஃபோர் என்ற முக்கிய அரசியல் பிரமுகர், குவைத்தில் பெருகிவரும் அன்னியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், குவைத் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய 30 லட்சம் ஆகும். இதில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். மொத்தம் 5,32,000 இந்தியர்களும், 2,51,000 வங்கதேசத்தினரும் வசிக்கின்றனர்.
குவைத் மக்கள் தொகையில் 64 சதவீதத்தினர் அன்னிய தேசத் தொழிலாளர்கள். இந்தளவுக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவையில்லை. இதில் 12 சதவீதம் பேர்தான் உயர்கல்வித் திறன் உள்ளவர்கள். மற்றவர்கள் கீழ்மட்டத் தொழிலாளர்கள்.
கீழ்மட்டத் தொழிலாளர்களால் நாட்டில் வீணாக தொற்றுநோய் ஏற்படும் அபாயம்தான் உண்டாகும். அதேபோல் திருமணமாகாத அன்னிய தொழிலாளர் பெருக்கத்தால் ஒருநாள் நிச்சயம் கேடுவிளையத்தான் போகிறது. எனவே இந்தப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த குவைத் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
குவைத்தின் பொருளாதாரமே பெட்ரோலியத்தையும் வெளிநாட்டுத் தொழிலாளர்களையும் தான் முழுக்க முழுக்க சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications