செங்கோட்டையில் கந்து வட்டிக் கொடுமை- பலர் தற்கொலை!
செங்கோட்டை: செங்கோட்டையில் தலைவிரித்தாடும் கந்துவட்டி கொடுமையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வட்டி கட்ட முடியாத பலர் தற்கொலை செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையை சுற்றி 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.. இங்கு தொழில் வளம் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த தொழிற்சாலையும் இல்லை. என்றாலும் கேரள மாநிலத்திலுள்ள ஆரியங்காவு, மற்றும் அச்சன்கோவில் ஆகிய கிராம மக்களும் பொருட்களை வாங்க செங்கோட்டைக்கு வருவதால் இரு மாநில மக்களின் பண்பாடு, கலாச்சாரத்தை காணலாம்.
பொருளாதார நிலையில் பின்தங்கி காணப்படும் செங்கோட்டை மக்கள் கந்து வட்டி கொடுமையில் சிக்கி தவிக்கின்றனர். இவர்களுடன் இங்குள்ள போக்குவரத்து கழகங்கள், ரயில் நிலையம், மருத்துவமனை, என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கந்து வட்டிக்கு பணம் வாங்கி கொண்டு முழிக்கின்றனர்.
இந்த கந்து வட்டி கும்பல் கொடுத்த பணத்திற்கு பத்து மடங்காக வசூலித்து விடுகிறது. எடுத்துகாட்டாக ஒருவர் பத்தாயிரம் ரூபாய் வாங்கியுள்ளார் என்றால் இவர்கள் 1 லட்சம் வரை வசூல் செய்துவிடுகின்றனர். அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் சிலரே தங்களுடன் வேலை பார்ப்பவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கின்றனர். இவர்கள் பணத்தை கொடுக்கும் போதே அவர்களின் ஏடிஎம் கார்டை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.
இதன் பிறகு கடன் வாங்கியவர்களின் மாத சம்பளத்தை இவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் மாத துவகத்திலேயே ஊழியர்கள் வெறுங்கையுடன் வீட்டுக்கு செல்கின்றனர். இந்த கொடுமை வெளிப்படையாக நடந்தாலும் அதனை தடுக்க வேண்டியவர்கள் கண்டுகொள்ளாததால் இந்த கும்பல் எங்கும் சிக்கி கொள்ளாமல் தப்பி வருகிறது.
கந்து வட்டியைக் கட்ட முடியாமர் பலர் தற்கொலை செய்து கொகண்டுள்ளனராமந். எனவே கந்து வட்டிக்காரர்களின் கொட்டத்தை அடக்கி, செங்கோட்டை பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்ந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications