விந்து சுரப்பி புற்றுநோய்க்கு புதிய மருந்து!
லண்டன்: விந்துச் சுரப்பி புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் மருந்தை அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உடலில் கொலஸ்டிராலை குறைக்கும் 'ஸ்டேடின் லிபிடர்' மற்றும் ஆர்த்ரைடீஸ் எனும் எலும்பு தேய்மான வலியைப் போக்குவதற்கான 'செலிபிரெக்ஸ்' ரக மருந்துகளை கலந்து கொடுத்தால் விந்து சுரப்பியில் ஏற்படும் புரோஸ்டேட் கேன்சர் என்ற புற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எலிகள் மீது செய்யப்பட்ட பரிசோதனையில் ஆரம்பநிலை புற்று நோயின்போது இந்த கலப்பு மருந்து வீரியமாகச் செயல்படுவதை கண்டறிந்தனர்.
அமெரிக்காவின் நியூஜெர்சி ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட விஞ்ஞானி ஆலன் கோனி கூறுகையில், இந்த ஆராய்ச்சியானால் பல மனித உயிர்களைக் காப்பாற்றமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
சோதனைக்கூட முயற்சிகள் திருப்தியாக இருக்கும்பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் விந்து சுரப்பி புற்றுநோய்க்கான புதிய மருந்து தயாராகிவிடும். தற்போது பயன்படுத்தப்படும் கலப்பு மருந்தினால் புற்றுநோய் பரவுவதைத் தடுக்கமுடியும் என்று உறுதிப்படுத்தினால் போதும். நோய் முற்றிப்போகுமோ என இனி கவலைப்படத் தேவையிருக்காது என்றார்.
அவருடன் பணியாற்றிய பேராசிரியர் ஜீ செங் கூறுகையில், லிபிடர் மற்றும் செலிபிராக்ஸ் மருந்தை குறைந்த அளவில் கலந்து பரிசோதித்தபோது முற்றியநிலை நோய் புற்றுக்கட்டிகளை எதிர்க்கும் திறன் உருவாகியதை கண்டறிந்தோம் என்றார்.
உலக அளவில் பல ஆண்டுகளாக பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஏப்பம்விட்டுவிட்ட புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சிகள் முடிவில்லாமல் தொடர்கின்றன. 50 வயதைக் கடந்த ஆண்களை அச்சுறுத்தும் நோயாக விந்துச்சுரப்பி புற்றுநோய் உருவெடுத்து வரும் நிலையில் தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவல் சற்றே ஆறுதலாக அமைகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications