கடும் வெயிலுக்கு ரயில்வே கேங்மேன், மூதாட்டி பலி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே கடும் வெயிலைத் தாங்க முடியாமல், ரயில்வே கேங்மேன் ஒருவர் பரிதாபமாக பலியானார். அதேபோல பொன்னேரியில் ஒரு மூதாட்டி உயிரிழந்தார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் கேங்மேனாக இருந்தவர் தனுஷ் (49). இவர் நேற்று கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கடும் வெயிலில் அவருக்கு சன் ஸ்டிரோக் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள முட்புதரில் ஒரு மூதாட்டி உயிரிழந்து கிடந்தார். அவருக்கு 60 வயதிருக்கும். வெயில் கொடுமையால் நடக்க முடியாமல் செடிகளுக்குள் விழுந்து அந்தப் பாட்டி இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலுக்கு ஏற்பட்டுள்ள முதல் பலி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. பகல் முழுவதும் வெளியில் நடமாடவே முடியாத அளவுக்கு வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. சராசரி வெப்ப நிலையின் அளவு 100 டிகிரியை எட்டிக் கொண்டிருக்கிறது.
விரைவில் அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ளதால் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
-
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications