தூத்துக்குடி சரத் கட்சி ஒன்றிய செயலர் படுகொலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேட்துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (34). இவர் சமத்துவ மக்கள் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்தார். இன்று காலை ஸ்ரீவைகுண்டம் மெயின் சாலையில் உள்ள சலூன் கடைக்கு சென்றார். முடித்திருத்துவதற்காக காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அரிவாளால் அவரது தலையை துண்டித்து படுகொலை செய்துவிட்டு தப்பியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சுயம்புலிங்கம் மீது இப்பகுதி காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளி்ட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications