என்கெளன்டர் கொலைகளுக்கு ராமதாஸ் எதிர்ப்பு
சென்னை: ரவுடிகளை சுட்டுக் கொல்லும் என்கெளன்டர் மோதல்களை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது ரவுடி பாம் பாலாஜி என்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு ராமதாஸ் பதிலளிக்கையில், என்கெளன்டர் முறையே முதலில் தவறானது. நீதிமன்றம் மூலம்தான் யாருக்கும் தண்டனை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் இதுவரை நடந்த போலீஸ் மோதல் கொலைகளில், உண்மையிலேயே காவல்துறையினருக்கும், ரவுடிகளுக்கும் இடையே மோதல் நடந்ததா என்பது குறித்து அரசு சார்பற்ற குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும்.
மோதல் கொலைக் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும். காவல்துறையினர், அரசியல்வாதிகள், ரவுடிகள் இடையிலான இணைப்பை உடைத்தெறிய வேண்டும்.
அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ரவுடிகள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும். ரவுடிகளற்ற மாநிலமாக தமிழகம் உருவாக காவல்துறையினர் முழுமையான அளவில் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.


Click it and Unblock the Notifications
