இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டத் தொடங்கிவிட்டது. அதிலும் கோடையின் உக்கிரமான அக்னி நட்சத்திரகம் இன்று தொடங்கியது. கத்தரி தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை, வேலூர், திருச்சி, புதுச்சேரி, கடலூர் ஆகிய ஊர்களில் வெயில் சென்சுரியை தாண்டி வாட்டி வதைக்கிறது.
காலை 7 மணிக்கே தொடங்கிவிடும் வெயிலின் உக்கிரம் நேரம் செல்ல செல்ல சுட்டெரித்து விடுகிறது. சாலைகளில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலும், அனல் காற்றும் வீசுகிறது.
மக்கள் கோடை வெயிலை சமாளிக்க இளநீர், மோர், தர்பூசணியை ஆகியவற்றை சாப்பிட்டு தாகம் தணிக்கின்றனர். ஆனால் இவற்றின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இளநீர் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. தர்பூசணி ஒரு பீஸ் ரூ.4 வரை விற்கப்படுகிறது.
பெருநகரங்களில் ஏசி, பிரிட்ஜ், ஏர்கூலர் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. விலையும் உயர்ந்துள்ளது.
காலை முதல் மாலை வரை வெப்பமும், அனல் காற்றும் வீசும் கத்தரி வரும் 28ம் தேதி வரை நீடிக்கும். வசதி படைத்தவர்கள் மலை பிரதேசங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
ஆற்காட்டார் மறுத்தாலும் தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களை மேலும் அவதிக்குள்ளாக்கி வருகிறது.
இடையிடையே வங்கக் கடலில் தாழ்வு மண்டலம் உருவாகி அவ்வப்போது மழையும் பெய்தாலும் மழை நின்றவுடனேயே வெப்பம் உக்கிரமாகிவிடுகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications