அரசு ஆம்புலன்ஸ் மாற்றம்: மக்கள் சாலை மறியல்
நெல்லை: நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸை, தென்காசிக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலப்பாளையம் அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மேலப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தனியார் அறக்கட்டளை மூலம் ஆம்புலன்ஸ் வேன் ஒன்று வழங்கப்பட்டது.
இந்த வேன் 24 மணி நேரமும் மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் இதை திடீரென்று தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர்.
ஏற்கெனவே மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் தேவையான சிகிச்சை பெற முடியவில்லை. இந்நிலையில் ஆம்புலன்ஸையும் பறிக்க முயல்வதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில் இந்திய யூனியன் மூஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் மீரான் மைதீன் தலைமையில் தவ்ஜீத் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மேலப்பாளையம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
ஆம்புலன்ஸை தென்காசிக்கு கொண்டு செல்லக்கூடாது என்று கூறி ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மேலப்பாளையம் போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து ஆம்புலன்ஸை தென்காசிக்கு மாற்றப்படுவது கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டதால் எல்லோரும் கலைந்து சென்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications