கர்நாடகம் முதல் கட்ட பிரசாரம் இன்று ஓய்வு - களத்தில் 47 கிரிமினல்கள்
பெங்களூர்: கர்நாடக சட்டசபைத் தேர்தலில், முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரம் இன்றுடன் முடிகிறது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்களில் 47 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.
கர்நாடக சட்டசபையின் 224 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மே 10, 16 மற்றும் 22 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இதில் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. முதல் கட்டமாக வருகிற 10ம் தேதி 89 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 2வது கட்ட தேர்தலில் 66 தொகுதிகளுக்கும், இறுதி கட்டமாக மே 22ம் தேதி 69 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறும்.
இதற்கிடையே, முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 47 பேர் கிரிமினல்கள் என தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் கண்காணிப்பு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய முக்கியக் கட்சிகளின் சார்பில் பல கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் திரிலோச்சன் சாஸ்திரி கூறுகையில், முக்கிய தேசிய கட்சிகளே கிரமினல்களை வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது மிகவும் கவலை தரும் அம்சமாகும் என்றார் அவர்.
பீகார், உ.பி, ம.பியை ஒப்பிடும்போது இது மிகவும் குறைச்சல் என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications