கர்நாடகத்தில் 89 தொகுதிகளில் நாளை முதல் கட்ட தேர்தல்
பெங்களூர்: கர்நாடகத்தில் நாளை 89 தொகுதிகளில் முதல் கட்டத் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மிகத் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இதில் பெங்களூரில் உள்ள 28 தொகுதிகளும் அடக்கம்.
காங்கிரஸ், பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ள இந்தத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் தனது ஓட்டு வங்கியை தக்க வைக்க பெரும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அதிமுகவும் 7 இடங்களில் போட்டியிடுகிறது.
கட்-அவுட், பேனர், கொடி, தோரணங்கள் போன்றவற்றை பயன்படுத்த தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகள் விதித்ததால் வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந் நிலையில் 89 தொகுதிகளிலும் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.
நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். முதல்கட்ட தேர்தலுக்கு 18,652 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொம்மனஹள்ளி, சிவாஜி நகர், பிடிஎம் லே அவுட் ஆகிய பெங்களூர் தொகுதிகள் பதற்றம் நிறைந்தவையாகக் கண்டறியப்பட்டு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வரும் 16ம் தேதி 2-வது கட்ட தேர்தலும், 22ம் தேதி 3-வது கட்ட தேர்தலும் நடக்கிறது. 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications