பழனி கோவில் நிலத்தை வாங்கிய சேதுபதி வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி.. தலைமறைவானவரை பிடிக்க தீவிரம்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பழனியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் முறைகேடு வழக்கில், நிலத்தை விற்ற முருகதாஸ் சாமிகள், வாங்கிய சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய மூவரும் தலைமறைவாகியுள்ளனர். தலைமறைவான மூவரையும் பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். பழனியில் சேதுபதி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

பழனி மலை அடி​வாரத்தில் உள்ள தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்​குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள 1.40 ஏக்​கர் நிலம் முறை​கே​டாக பத்​திரப்​ப​திவு செய்​யப்பட்டது தொடர்​பாக சார் ​ப​தி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன், நிலத்தை விற்​பனை செய்​தவர், வாங்​கிய​வர்​கள் என 4 பேர் மீது பழனி அடி​வாரம் போலீ​சார் வழக்​கு ​ப​திவு செய்​தனர்.

100 Crore Palani Temple Land Scam CBCID Hunts Three Accused Raids Buyer s House

இந்த விவ​காரம் தொடர்​பாக சார் ​ப​தி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்​யப்​பட்​டனர். பத்​திரப் ​ப​திவை​யும் உயர் நீதி​மன்​றம் ரத்து செய்​தது. மேலும், வழக்கு விசா​ரணை சிபிசிஐடிக்கு மாற்​றப்​பட்​டது. இதையடுத்​து, சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்​கம் தலை​மையி​லான குழு​வினர் விசா​ரணை​யைத் தொடங்​கி, தேவஸ்​தானம் மற்​றும் பத்​திரப்​ப​திவு அலு​வல​கத்​தில் விசா​ரித்​தனர்.

நேற்று திண்​டுக்​கல் சிபிசிஐடி அலு​வல​கத்​தில் பழனி தேவஸ்​தான நிலப்​பிரிவு கண்​காணிப்​பாளர் முரு​கானந்​தம், வழக்​குப் ​பிரிவு கண்​காணிப்​பாளர்​கள் சிவனேசன், கணப​தி, வட்​டாட்​சி​யர் (ஓய்​வு) மாரியப்​பன், கிராம நிர்​வாக அலு​வலர் (ஓய்​வு) சின்​ன​சாமி ஆகிய 5 பேரிடம் எஸ்பி சாஜிதா விசா​ரணை நடத்​தி​னார்.

இதே​போல, பத்​திரப்​ப​திவு அலு​வல​கத்​தில் மற்​றொரு குழு​வினர் ஆய்வு செய்து சிசிடிவி வீடியோ பதிவு​களைப் பெற்​றுக்​கொண்​டனர். கிடுக்​கிப்​பிடி விசா​ரணை​யால் தேவஸ்​தானம் மற்​றும் பத்திரப் பதிவுத் துறை அதி​காரி​கள், பணி​யாளர்​கள் பலர் கலக்​கத்​தில் உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இந்த நிலை​யில் நிலத்தை விற்ற திருப்​பு​கழ் சுவாமிகள், முரு​க​தாஸ் சுவாமிகள் மற்றும் தண்​ட​பாணி சுவாமிகள் அறக்​கட்​டளை​யைச் சேரந்த முரு​க​தாஸ், நிலத்தை வாங்​கிய உடுமலைப்​பேட்டை பாப்​பான்​குளத்​தைச் சேர்ந்த வெள்​ளைத்துரை மற்​றும் பழநி டி.கே.என்​.புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகியோர் தலைமறை​வாகியுள்ளனர். அவர்கள் தங்கள் செல்​போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்​திருப்​பதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

மேலும் பத்​திரப்​ப​திவு நாளில் சாட்சி கையெழுத்து போட்டவர்களும் தலைமறைவாகி உள்​ளனர். இவர்​களைத் தேடும் பணி நடந்து வரு​கிறது. முறை​கே​டாக கோயில் நிலத்தை விற்றவர், வாங்​கிய​வர்​கள் புகைப்​படத்தை வெளி​யிட வேண்​டும் என அரசி​யல் கட்​சி​யினர் உள்பட பலரும் வலி​யுறுத்தி வரும் நிலை​யில், நிலத்தை விற்ற முரு​க​தாஸ், வாங்​கிய சேதுபதி ஆகியோரது புகைப்​பட​மும் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+