விஜய்க்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் கம்யூனிஸ்ட்டுகள்.. இடைத்தேர்தலுக்கு பின் ஆதரவு இல்லையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின், தவெக ஆட்சிக்கு அளித்த வந்த ஆதரவை திரும்ப பெறும் முடிவில் கம்யூனிஸ்ட்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொலிட் பீரோவின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டதாக முனுமுனுப்புகள் அதிகரித்துள்ளன.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு கொடுத்தன. அமைச்சரவையில் இடம் கொடுக்க தவெக முன் வந்த போதும் கூட, கம்யூனிஸ்ட்டுகள் அதனை ஏற்கவில்லை. எந்தவித நிபந்தனையும் இன்றி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம் என்றும் அறிவித்தனர்.

Communists

ஆனால் தவெக ஆட்சி அமைத்து 5 மாதங்கள் மட்டுமே ஆகி இருக்கும் சூழலில், தவெக - கம்யூனிஸ்ட்டுகள் இடையில் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக கம்யூனிஸ்ட் மாணவர் இயக்க போராட்டங்களை ஒடுக்க சுற்றறிக்கை அனுப்பியது, கம்யூனிஸ்ட்டுகளை கணக்கெடுக்க சுற்றறிக்கை அனுப்பியது, சென்னை ஏர்போர்ட் தனியார்மயம், புதிய தலைமைச் செயலகம் ஆகியவற்றில் கம்யூனிஸ்ட்டுகள் கொந்தளித்தனர்.

இன்னொரு பக்கம் பாஜகவுக்கு எதிராக தவெகவின் மவுனம் அவர்களுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாகவே தவெக அமைத்துள்ள மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் இணைய முன் வரவில்லை. அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவர் இயக்கங்கள் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.

இப்படியான சூழலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்கி அதிர்ச்சி கொடுத்தனர். கம்யூனிஸ்ட்டுகள் இந்த செயல்பாடு முதல்வர் விஜய்யை சங்கடப்படுத்தி இருக்கிறது. தற்போது இடைத்தேர்தலின் போது தவெக மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் முன் வைத்துள்ளன.

இதனால் இடைத்தேர்தல் முடிவு எப்படி வந்தாலும் தவெக ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவது என்ற முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்துவிட்டதாக பேச்சுகள் அதிகரித்துள்ளது. இதற்காக பொலிட் பீரோவின் ஒப்புதலையும் பெற்றுவிட்டதாக முனுமுனுப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் இடைத்தேர்தலுக்கு பின் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து இந்த முடிவை அறிவிக்கும் என்று சொல்லப்படுகிறது,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+