'வெற்றிப் பயணம்' திட்டம் குறித்த குழப்பம்.. கோவை அரசு பேருந்து நடத்துநர் தந்த விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

கோவை: மகளிருக்கான 'வெற்றிப் பயணம்' திட்டம் குறித்துப் பலரிடையே குழப்பம் நிலவி வருகிறது. அதாவது, அரசுப் விரைவுப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் (SETC) தவிர்த்து, மொஃபசல் (Mofussil), எல்.எஸ்.எஸ் (LSS), டீலக்ஸ் மற்றும் சாதாரண பேருந்துகள் என அனைத்து வகையான அரசுப் பேருந்துகளிலும் இலவசமாகப் பயணிக்கலாம் என்று மக்கள் நம்புகிறார்கள். பொதுமக்கள் நினைப்பதில் பாதி மட்டுமே உண்மை; அவர்கள் புரிந்து கொண்ட பல விஷயங்கள் தவறானவை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

இப்பயணத் திட்டம் குறித்த குழப்பங்களுக்குக் கோவையைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் அளித்த தெளிவான விளக்கம் வருமாறு: "நமது அரசு மக்களுக்காக ஒரு சிறந்த திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால், திட்டம் குறித்து முழுமையாகத் தெரியாமல் பல பேருந்துகளில் நடத்துநர்களிடம் பயணிகள் தேவையின்றி வாக்குவாதம் செய்கிறார்கள். நாம் முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Confusion regarding the Vetri Payanam scheme Explanation given by a government bus conductor

நகரப் பேருந்து (Down Bus) என்பது ஊருக்குள் செல்லும் பேருந்து; புறநகர்ப் பேருந்து (Mofussil Bus) என்பது ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்லும் பேருந்தாகும்.

நகரப் பேருந்துகள்

இப்போது நகரப் பேருந்துகள் அனைத்திலும் மகளிர் கட்டணமின்றிப் பயணிக்கலாம். அதாவது எல்.எஸ்.எஸ் (LSS), டீலக்ஸ் (Deluxe) என எதுவாக இருந்தாலும் நகரப் பேருந்து என்றால் இலவசம். அந்த இலவசப் பயணத்தை உறுதி செய்ய, அப்பேருந்துகளில் கண்டிப்பாக 'வெற்றிப் பயணம்' என்று ஒட்டப்பட்டிருக்கும்.

புறநகர்ப் பேருந்துகள்

புறநகர்ப் பேருந்துகளைப் பொறுத்தவரை, 'சாதாரண கட்டணப் பேருந்து' (Ordinary Fare Bus) என்றும், 'வெற்றிப் பயணம்' என்றும் பலகை வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் மட்டுமே மகளிர் கட்டணமின்றிப் பயணிக்க முடியும்.

ஆனால் பொதுமக்கள், அரசு இலவசம் என்று அறிவித்துவிட்டதால் அனைத்துப் பேருந்துகளிலும் ஏறிக் கொண்டு, 'ஏன் எங்களுக்கு இலவச டிக்கெட் தர மறுக்கிறீர்கள்?' என்று ஆதங்கப்படுகிறார்கள். அரசு அறிவித்த சலுகையை மக்களுக்குத் தராமல் விடுவதால் நடத்துநர்களுக்கு எந்த லாபமும் இல்லை. எனவே, இத்திட்டத்தை மக்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்பெல்லாம் நகரப் பேருந்துகளில் சாதாரண கட்டணப் பேருந்துகளுக்கு மட்டுமே இலவசம் அனுமதிக்கப்பட்டது; எல்.எஸ்.எஸ் அல்லது டீலக்ஸ் பேருந்துகளில் அனுமதி கிடையாது. ஆனால் இப்போது, நகரப் பேருந்துகள் அனைத்திலும் மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம்.

எதில் இலவசம்

ஆனால், மொஃபசல் பேருந்துகளில் சாதாரண கட்டணப் பேருந்துகளில் மட்டுமே இலவசம் பொருந்தும். இந்த சாதாரண கட்டணப் பேருந்துகள் என்பது ஒரு மாவட்டத்திலிருந்து பக்கத்து மாவட்டத்தின் நகரங்களை இணைப்பவையாகும். அப்பேருந்துகளிலும் 'வெற்றிப் பயணம்' என்று போடப்பட்டிருந்தால் மட்டுமே இலவசமாகப் பயணிக்க முடியும். 'வெற்றிப் பயணம்' என்று போட்டும் நடத்துநர் கட்டணம் கேட்டால் நியாயம் கேட்கலாம்.

புகார் அளிக்கிறார்கள்

நன்கு விவரம் தெரிந்த ஒருவர், சேலத்திலிருந்து சென்னை வரை பயணம் செய்துள்ளார். சென்னை போய் இறங்கியதும், 'என் மனைவிக்கும் மகளுக்கும் டிக்கெட் போட்டுப் பணம் வாங்கிவிட்டார்கள்' என்று இணையதளத்தில் புகார் அளித்திருக்கிறார். படித்தவரே இப்படிப் புகார் அளித்தால் எப்படி? சேலத்திலிருந்து சென்னை வரை செல்லும் விரைவுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்க யாராவது அனுமதிப்பார்களா? எனவே, அரசின் இத்திட்டத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு, மற்றவர்களுக்கும் இந்தத் தகவலைப் பரப்புங்கள்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+