ஏன் ப்ரஸ்மீட் கொடுக்க மாட்டேங்குறீங்க விஜய்.. பிரகாஷ் ராஜ் சரமாரி கேள்வி
சென்னை: எஸ்ஐஆர் முறைகேடு விவகாரம் நாட்டில் புயலை கிளப்பியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது, தேர்தல் ஆணையர்களே குற்றம் சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் விஜய் முதலமைச்சரானாலும் ப்ரஸ் மீட் கொடுக்காமல் அவமானப்படுத்துகிறார் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "நான் மக்களுடன் இருக்கிறேன். இப்போது நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. இந்தியாவுக்கு இப்போது அரசியல் கட்சிகள் தேவை இல்லை. மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து பேசும் இயக்கங்கள் தான் தேவை. என்னை பொறுத்தவரை நம் அரசியலமைப்பில் மக்கள் அரசியல்படுத்தப்பட வேண்டும். அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் வேலை பார்க்க வேண்டும்.

பிரச்சனையை கேட்பது மீடியா வேலை
ஊடகம் மூலம் நான் பேசுவதை முதலமைச்சர் கேட்கட்டும். அதற்கு பதில் சொல்லட்டும். ஏன் தமிழகத்தில் போராட இடம் கொடுப்பதில்லை. ஏன் ப்ரஸ் மீட் கொடுப்பதில்லை. ஏன் ப்ரஸை மதிப்பதில்லை. ஏன் ப்ரஸை அவமானப்படுத்துகிறார்கள். இப்போதுள்ள அனைவருக்கும் பதில் கொடுத்து கொண்டிருக்கிறேன். சரியோ, தப்போ பதில் கொடுக்க வேண்டியது என் கடமை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிறகு, மீடியாவுடன் எந்த பிரச்சனையும் தப்பான பிரச்சனை இல்லை. பிரச்சனையை கேட்பது தான் மீடியாவின் வேலை.
அதற்கு பதில் கொடுப்பது உன்னுடைய கடமை. விஜய் ப்ரஸ்மீட் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் போராடுங்கள். ஏன் அவர்களின் செய்தியை கவர் செய்கிறீர்கள். எனக்கும், ஊடகங்களுக்கும் கருத்து, கொள்கை ரீதியாக பிரச்சனை இருக்கலாம். நாம் இருவரும் இந்த நாடு எனும் ஒரு படகில் பயணித்து கொண்டிருக்கிறோம். அது ஓட்டையாக இருக்கிறது. இந்த ஜனநாயகத்தை விட்டுவிடக்கூடாது. எந்த ஆட்சியும் போராட்டத்தை தடுக்க கூடாது.
கோபம் வர வேண்டாமா
மன்னராட்சி ரங்கா பிர்லா ஆட்சி, அவர்கள் உங்களை அவமானப்படுத்தியதை போல யாரும் செய்யவில்லை என்பதை உணருங்கள். அந்த மன்னன் ஒரு ப்ரஸ்மீட் கொடுக்க மாட்டான். உங்களுக்கு கோபம் வர வேண்டுமா வேண்டாமா. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தாலும் நான் கேட்கிறேன். உங்களை அவமானப்படுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு புரிகிறதா. ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காம் தூண். இன்றைக்கு இந்த மன்னர் வந்து என்ன ஆனது. நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஊடகங்கள் மீதும் நம்பிக்கை இல்லை. நம்பிக்கையே இல்லாத ஒரு நாட்டில் எப்படி வாழ முடியும். இந்த கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும். இதை விடக்கூடாது. ஒருகட்டத்தில் கேட்பதற்கு எதுவுமே இருக்காது" என்று கூறினார். அப்போது செய்தியாளர்கள் எஸ்ஐஆர், காங்கிரஸ் தொடர்பாக பிரகாஷ் ராஜிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். அவர் கோபமடைந்து செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


Click it and Unblock the Notifications
