வீடு வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்பு! ரெப்போ ரேட் விகிதம் திடீரென உயர்த்திய ரிசர்வ் வங்கி

Subscribe to Oneindia Tamil

மும்பை: வங்கிகளுக்கான ரெப்போ ரேட் விகிதத்தை ரிசர்வ் வங்கி திடீரென உயர்த்தி அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி கூட்டத்தில் ரெப்போ ரேட் விகிதத்தில் 0.25 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 5.25 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக ரெப்போ ரேட் உயர்த்தப்பட்டுள்ளது. ஆர்பிஐயின் ரெப்போ வட்டி விகித உயர்வால் வீட்டு கடன், வாகன கடன்களுக்கான வட்டி உயர வாய்ப்பு உள்ளது.

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் பற்றி அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி கூட்டத்தில் ரெப்போ ரேட் விகிதத்தில் 0.25 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Reserve Bank Repo rate raised to 5 50 interest rates on home and vehicle loans likely to rise

இதன்படி, 5.25 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக ரெப்போ ரேட் உயர்த்தப்பட்டுள்ளது. ஆர்பிஐயின் ரெப்போ வட்டி விகித உயர்வால் வீட்டு கடன், வாகன கடன்களுக்கான வட்டி உயர வாய்ப்பு உள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நிதிக் கொள்கைக் குழு (MPC) இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளது.

பணவீக்கம் அதிகரித்து வருவது, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த வட்டி விகித உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நாணய கொள்கை குழு கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் மல்ஹோத்ரா கூறியதாவது:-

"வர்த்தகம் தொடர்பான நிச்சயமற்ற தன்மை தொடர்ந்து நீடிக்கிறது. உலகளாவிய பொருளாதார சூழலும் இன்னும் பலவீனமாகவே உள்ளது. ஈரான் போர் காரணமாக வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளிலும் பாதிப்பு ஏற்படக்கூடும். இருந்தாலும், இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. குறுகிய காலத்தில் வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு இல்லை" என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+