பௌத்த மதத்திற்கு மாற முஸ்லீம் பெண்ணுக்கு மலேசிய கோர்ட் அனுமதி
கோலாலம்பூர்: மலேசியாவைச் ேசர்ந்த முஸ்லீம் ஒருவர் மீண்டும் புத்த மதத்திற்கு மாற அந்நாட்டு ஷரியத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மலேசியாவைச் சேர்ந்தவர் சித்தி பாத்திமா. இவர் சீன வம்சாவளியைச் ேசர்ந்தவர். இவரது இயற்பெயர் டான் இயான் ஹூவாங். இவர் கடந்த 2006ம் ஆண்டு மே மாதம்ஸ பினாங்கு இஸ்லாமிய ஷரியத் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார்.
அதில், நான் கடந்த 1998ம் ஆண்டு ஜூலை மாதம் இஸ்லாம் மதத்திற்கு மாறினேன். ஈரானைச் ேசர்ந்த பெர்தூன் அஷானியன் என்பவரை மணப்பதற்காக இவ்வாறு மதம் மாறினேன். 1999ம் ஆண்டு எங்களது திருமணம் நடந்தது.
இருப்பினும் மதம் மாறிய பிறகும் நான் இஸ்லாமின் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்கவில்லை.
எனது கணவர் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அவருக்காகவே நான் மதம் மாறினேன். என்னை அவர் தன்னுடன் ஈரான் அழைத்து் செல்வார் என்று நம்பினேன்.
இருப்பினும் திருமணத்திற்கு சில மாதங்கள் கழித்து அவர் என்னை விட்டுச் ெசன்று விட்டார். அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியவில்லை.
எனவே நான் மீண்டும் புத்த மதத்திற்கு மாற நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஷரியத் உயர்நீதிமன்ற நீதிபதி உத்மான் இப்ராகிம், சித்தி பாத்திமா இஸ்லாமை விட்டு விட்டு புத்த மதத்திற்கு மாற அனுமதி அளித்தார்.
இதுகுறித்து அவர் அளித்த தீர்ப்பில், மனுதாரர் அளித்துள்ள ஆவணங்களை வைத்துப் பார்க்கும்போது அவர் இஸ்லாமை பின்பற்றி வரவில்ைல என்று தெரிகிறது. மேலும் புத்த மதம் மீதான அவரது நம்பிக்ைக இன்னும் குறையவில்லை என்றும் தெரிகிறது.
எனவே அவர் தனது தாய் மதத்திற்கு மாற இந்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. இனிமேல் சித்தி பாத்திமா முஸ்லீம் இல்லை.
அவர் இஸ்லாமியராக மாறியதற்காக இஸ்லாமிய மத கவுன்சில் வழங்கிய சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்.
இருப்பினும் அவரது அடையாள அட்டையில் சித்தி ஒரு முஸ்லீம் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை நீக்கும் அதிகாரம் கோர்ட்டுக்கு இல்லை. இதுகுறித்து அவர் தேசிய பதிவுத் துறையை அணுகி நிவாரணம் பெறலாம்.
சித்தி பாத்திமாவை, மதம் மாற்றிய அவரது கணவர் இஸ்லாம் குறித்து முறையாக அவருக்குப் போதிக்கவில்லை. எடுத்துக் கூறத் தவறி விட்டார் என்று தெரிவித்துள்ளார் நீதிபதி உத்மான் இப்ராகிம்.
இந்தத் தீர்ப்பு மலேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு தீர்ப்பு மலேசியாவில் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தத் தீர்ப்பினால் இஸ்லாம் மதத்திலிருந்து தங்களது தாய் மதத்திற்கு மாறத் துடிக்கும் மலாய் அல்லாத பிற இனத்தவருக்கு இந்தத் தீர்ப்பு ெபரும் ஆறுதலாக அமைந்திருப்பதாக அங்குள்ள நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications