சேது கால்வாய்: உச்சநீதிமன்ற யோசனையை மத்திய அரசு பரிசீலிக்கும்- பாலு

ரூ.2,400 கோடி செலவிலான சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்தும்போது, ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் மாற்றுவழியில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு சென்னை உயர்நீதிமன்றம் கூறிய யோசனையை உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னையில் அமைச்சர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இதை ஒரு யோசனையாகத்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரவாக சொல்லவில்லை. மாற்றுவழி குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளின் முழு விவரமும் மத்திய அரசுக்கு இன்னும் கிடைக்கவில்லை.
அந்த விவரங்கள் கிடைத்தவுடனே அது பற்றி நன்கு ஆய்ந்து மேற்கொண்டு நடவடிக்கை எடு்க்கப்படும் என்றார் பாலு.
முன்னதாக, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரி்த்தது.
விசாரணையில், மாற்று வழி குறித்து மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்ததோடு, 25 கி.மீ. நீளமுள்ள 'ஆதாம் பாலம்' என்றும் அழைக்கப்படும் ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட புராதன சின்னமா என்பதை உறுதி செய்வதற்கு மத்திய தொல்லியல் துறையினர் ஏதாவது விஞ்ஞானபூர்வ ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்களா என்ற விவரத்தையும் மத்திய அரசு தெரிவிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications