153 மாணவருக்கு ஒரே ஆசிரியர்- அரசு பள்ளி அவலம்
கரூர்: கரூர் அருகே உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 153 மாணவர்களுக்கு ஒரே தலைமை ஆசிரியர் பாடம் நடத்தும் அவலம் நிலவுகிறது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் மாவட்ட ஆசிரியர் பள்ளிக்கான மாதிரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது.
இந்த பள்ளியில் இருந்து கடந்த 2002ம் ஆண்டில் ஆரம்ப்பள்ளி தனியாக பிரிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக அயல்பணி (டெபுடேஷன்) முறையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் இந்த பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 2006ம் ஆண்டு ஆசிரியர் ஒருவர் பணி மாறுதலில் சென்ற பிறகு வேறு ஆசிரியர்கள் இந்த பணியிடத்தை நிரப்பவில்லை. புதிய ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை.
தற்போது பள்ளியில் 153 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இவர்களை தலைமை ஆசிரியர் ஒருவர் மட்டுமே கவனித்து வருகிறார். மேலும் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் இப்பள்ளி சேர்க்கப்படாமல் தனிமுறையில் பின்பற்றப்படுகிறது. இதனால் கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
இப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், குழந்தைகளின் கல்வித் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் வைத்துள்ளது. இந்த அவல நிலையை போக்க வேண்டும் என்று அக்கிராம மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications