டுவென்டி20 லீக் நடத்த ஆஸி. கிரிக்கெட் வாரியம் திட்டம்
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திவரும் ஐபிஎல் டுவென்டி20 லீக் மூலம் லாபம் கொழிப்பதை அறிந்து கொண்டு இந்த போட்டிகளை நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும் ஆசை வந்துவிட்டது.
இங்கிலாந்து நாட்டில்தான் முதன்முதலாக உள்நாட்டு அணிகளுக்காக சர்வதேச வீரர்கள் கலந்து கொள்ளும் லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் அவை 3 நாள் போட்டிகளாகும். இப்போதும் அங்கு லீக் போட்டிகள் நடந்து வருகின்றன என்றாலும் அதற்கு மவுசு குறைந்துவிட்டது. முதன்முதலில் சர்வதேச ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை பந்தயத்தையும் இங்கிலாந்து அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் மக்கள் ஆர்வம் குறைந்து ஒருநாள் போட்டிகளை விரும்பி ரசிக்கத் தொடங்கினர்.
எதையும் உடனடியாக தெரிந்து கொள்ளவேண்டும் என விரும்புவதுதானே மனித இயல்பு.இதுதான் தற்போதைய டுவென்டி20க்கும் அடிப்படையாகும்.
ஆஸ்திரேலியாவில் நடந்த டுவென்டி20 உலகக்கோப்பைக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் முந்திக்கொண்டு ஐபிஎல் லீக் போட்டிகளை ஆரம்பித்தது.
இந்த போட்டிகளின் மூலம் விளம்பரம், ஒளிபரப்பு உரிமைகள் என பல்வேறு வகையிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அள்ளியது.
இதைப் பார்த்து சப்புக்கொட்டத் தொடங்கிய இங்கிலாந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் தாங்களும் டுவென்டி20 லீக் போட்டி தொடங்குவது பற்றி முடிவு செய்தன. அதற்கான வழிமுறைகள் பற்றி திட்டமிட்டு வருகின்றன.
இந்த வரிசையில் லேட்டஸ்டாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் சேர்ந்துவிட்டது.
இது குறித்து அந்த வாரியத்தின் செய்தி தொடர்பாளர் பீட்டர் யங் கூறுகையில், உள்நாட்டு டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகளை கடந்த மூன்று வருடங்களாக வெற்றிகரமாக நடத்திவருகிறோம். இந்த போட்டிகளில் மாநில வீரர்கள் மட்டும் விளையாடி வருகின்றனர்.
போட்டிகள் தொடர்பான விளம்பரம் மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமை வருமானம் குறைவாக உள்ளது. ஐபிஎல் அமைப்பின் டுவென்டி20 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து வருவதால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு புதிய டுவென்டி20 போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்த லீக் போட்டியை நியூசிலாந்துடன் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் நிர்வாகத்தை பின்பற்றி உள்நாட்டு அணி, சர்வதேச வீரர்களின் ஊதியம், நட்சத்திர வீரர்களை தேர்வு செய்வது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
-
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications