சரப்ஜித் தண்டனையை குறைக்க பாக். உள்துறை எதிர்ப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர் சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை குறைக்க அந்நாட்டு உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அப்படி செய்வதால் சதிச் செயல்களை ஊக்கப்படுத்துவது போலாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக கூறி கைது செய்யப்பட்ட இந்தியர் சரப்ஜித்சிங்குக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. ஏப்ரல் 1ம் தேதி தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
இந்திய அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் சரப்ஜித்தின் தூக்கு தண்டனை மே முதல் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் பிரதமர் கிலானியின் தலையீட்டால் மறுதேதி குறிப்பிடப்படாமல் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. அவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று இந்திய அரசும், சரப்ஜித்தின் குடும்பத்தினரும் பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக அதிபர் முஷாரப், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்களுக்கு பிரதமர் கிலானி பரிந்துரைத்தார். தண்டனையை குறைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் ஜபீர் அப்பாஸி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் வெளியுறவு, சட்டம், உள்துறை, மனித உரிமை ஆணையம் ஆகிய துறைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக வெளியான செய்தியில், சரப்ஜித்தின் தண்டனையை குறைப்பதற்கு உள்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், இதுபோன்ற தண்டனை குறைப்பு பாகிஸ்தான் சித்தாந்தத்துக்கு எதிரானது. இது சதி செயல்களை ஊக்கப்படுத்துவதாக அமைந்துவிடும்.
அப்படியே சரப்ஜித்துக்கு மன்னிப்பு வழங்கப்பட்டாலும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது.
ஏனெனில் குற்றவாளிகளை பரிமாறி கொள்ளும் ஒப்பந்தம் பாகிஸ்தான்-இந்தியா செய்து கொள்ளவில்லை. சரப்ஜித்தை விடுவிக்க வேண்டும் என்றால் அவ்வாறான ஒப்பந்தம் அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களின் அறிக்கையை 24 மணிநேரத்துக்குள் தருமாறு சட்ட அமைச்க்கத்திடம் கோரப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பிரதமர் மற்றும் அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications