கருணாநிதியுடன் பிரதமர் பேச்சு - குணமடைய வாழ்த்து
Subscribe to Oneindia Tamil

முதல்வர் கருணாநிதி முதுகு மற்றும் கழுத்து வலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வரின் உடல் நலம் குறித்து அவரது மகளும், திமுக எம்.பியுமான கனிமொழியிடம், தொலைபேசி மூலம் நேற்று விசாரித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
அதேபோல பிரதமர் மன்மோகன் சிங்கும் நேற்று முதல்வரைத் தொடர்பு கொண்டு பேசினார். விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று அப்போது வாழ்த்தினார். மேலும், கருணாநிதிக்கு பூங்கொத்தும் அனுப்பி வைத்துள்ளார்.
தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாவும் முதல்வர் கருணாநிதியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அவரும் கருணாநிதிக்கு பூங்கொத்து அனுப்பி வைத்தார்.
மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் நேற்று மருத்துவமனைக்குச் சென்று முதல்வரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
மாறன் சகோதரர்கள் சந்திப்பு:
இதற்கிடையே, மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து முதல்வருடன் பேசாமல் இருந்து வந்த சன் டிவி அதிபர் கலாநிதி மாறனும், அவரது தம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறனும் நேற்று முதல்வரை தனித் தனியாக சந்தித்து நலம் விசாரித்தனர்.
காலையில் முதல்வரைச் சந்தித்தார் கலாநிதி மாறன். மாலையில் தயாநிதி மாறன் கருணாநிதியை சந்தித்தார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு இருவரும் தங்களது தாத்தாவைச் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், முதல்வரின் மகன் மு.க.அழகிரி, காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, வன்னிய பேரவை தலைவர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் முதல்வரை நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.
முதல்வர் கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும், இன்னும் ஓரிரு தினங்களில் அவர் குணமடைவார் என்றும், அவருக்குப் பிசியோதெரபி பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் ெதரிவித்துள்ளனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications