பிருத்வி ஏவுகணையை செலுத்தியது இந்தியா
Subscribe to Oneindia Tamil
பாலாசூர் (ஒரிஸ்ஸா): தரையிலிருந்து பாய்ந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் பிருத்வி ஏவுகணை இன்று மீண்டும் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
ஒரிஸ்ஸா மாநிலம் பாலாசூரில் உள்ள சந்திபூர் ஏவுகணை ஆராய்ச்சி மையத்திலிருந்து இன்று காலை 10.30 மணிக்கு இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது.
700 கிலோ எடை கொண்ட வெடி பொருளுடன், 250 கி.மீ. தூரம் வரை பாய்ந்து தாக்கும் சக்தி கொண்ட இந்த ஏவுகணை இன்று மொபைல் லாஞ்சர் மூலம் செலுத்தப்பட்டது.
செயற்கைக் கோள்களை செலுத்த தயாரிக்கப்பட்ட எஸ்.எல்.வி.-3 ரக ராக்கெட்டை தான் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. பிருத்வி ஏவுகணையாக மாற்றி, வெற்றிகரமாக வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications