கிழக்கு இலங்கையில் தமிழர்கள் - முஸ்லீம்கள் மோதல் - 8 பேர் பலி
மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் தேர்தல் முடிவடைந்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிைலயில், தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே கலவரம் வெடித்துள்ளது. இதில் இரு தமிழர்கள் உள்பட 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் ராஜபக்சே தலைமையிலான ஆளுங்கூட்டணி வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பின்னர் முஸ்லீம் ஒருவர்தான் முதல்வராக்கப்பட வேண்டும் என்று முஸ்லீம் கட்சியின் தலைவரான ஹிஸ்புல்லா வலியுறுத்தினார்.
ஆனால் தமிழர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசன்துரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையானை, அதிபர் ராஜபக்சே முதல்வராக தேர்வு செய்து அவருக்குப் பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.
இதற்கு அங்குள்ள முஸ்லீம் கட்சிகள் கடும் எதிர்ப்பு ெதரிவித்து வருகின்றன. இந்த நிலையில் அங்கு தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே கலவரம் வெடித்துள்ளது.
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள காட்டான்குடியில், நேற்று முஸ்லீம் கட்சிையச் ேசர்ந்த சிலர் டி-56 ரக துப்பாக்கிகளால் பிள்ளையான் கட்சியைச் ேசர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சாந்தன், தர்ஷன் என்கிற பரசுராமன் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக மட்டக்களப்பில் முஸ்லீம்கள் மீது பிள்ளையான் கட்சியைச் சேர்ந்தவர்கள் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 முஸ்லீம்களும், ஒரு சிங்களரும் உயிரிழந்தனர். 9 முஸ்லீம்கள் படுகாயமடைந்தனர்.
தேர்தலுக்குப் பிந்தைய இந்த வன்முறையால் கிழக்கு மாகாணத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. வன்முறையைத் தணிக்க ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களுக்கிடையேயும் அமைதியை ஏற்படுத்த அரசு சார்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமைச்சர் ஆனார் ஹிஸ்புல்லா:
இதற்கிடையே, பிள்ளையான் முதல்வராவதற்கு எதிர்ப்பு ெதரிவித்து வந்த ஹிஸ்புல்லா நேற்று அவரது அமைச்சரவையில், சுகாதாரம், இளைஞர் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் வன்முறை குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications